அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகளில் கத்தரிக்காயும் ஒன்று.இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் புற்றுநோய் செல்களை பெருகாமல் பாதுகாப்பதிலும் கத்தரிக்காயின் பங்கு சிறப்பானது.
பல வகையான கத்தரிக்காய் நமக்கு சந்தையில் கிடைக்கின்றன.
கத்தரிக்காய் வகைகள்:
- முள்ளுக்கத்தரிக்காய்
- பூனை தலை கத்தரிக்காய்
- வெள்ளை கத்தரிக்காய்
- பொய்யூர் கத்தரிக்காய்
- துக்கானம் பாளையம் கத்தரிக்காய்
- சுக்காம்பார் கத்தரிக்காய்
- அய்யம்பாளையம் கத்தரிக்காய்
- முட்டை கத்தரிக்காய்
- மணப்பாறை கத்தரிக்காய்
- பவானி கத்தரிக்காய்
இந்த கத்தரிக்காய் அனைத்தும் அந்தந்த ஊரின் மண்வளம், நீர்வளத்திற்கு ஏற்றார்போல அதன் மணம், குணம், சுவை மற்றும் மருத்துவ குணங்கள் ஆகியவை தனித்தன்மை நிறைந்து காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தோற்றம், நிறம் மற்றும் அளவில் மாறுபடும், வெள்ளை, நீலம், ஊதா, கருநீலம்,
அடர் ஊதா போன்ற நிறத்தில் காணப்படுகிறது. கத்தரிக்காயில் க்ளோரோஜெனிக் அமிலம் மற்றும் யூரிக் அமிலத்தை பெருக்கும் பியூரின்களும்(PURIENS) உள்ளது.
கத்தரிக்காயின் சத்துக்கள் :
- நார்ச்சத்து: செரிமானத்திற்கு உதவுகிறது.
- வைட்டமின்கள்: வைட்டமின் கே, சி, பி6, மற்றும் ஃபோலேட் (போலிக் ஆசிட்)
- ஆண்டி ஆக்ஸிடன்டுகள்: நோய் எதிர்ப்புச் சக்தியைக் பெருக்கும்.
- தாதுக்கள்: இரும்பு சத்து (IRON), நியாசின் ( வைட்டமின் பி3), மாங்கனீஸ், தாமிரம், மெக்னீசியம், பொட்டாசியம்.
கத்தரிக்காய் ஒரு குறைந்த கலோரி கொண்ட உணவு மேலும் குறைந்த கொழுப்பு கொண்டது.
நம்முடைய அன்றாட உணவில் கத்தரிக்காயை சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பெறுங்கள்.
கத்தரிக்காயை பல விதமான சமையல் செய்யலாம்.
தனி சமையலாகவும் செய்யலாம். அல்லது சாம்பார், கார குழம்பு, அவியல் போன்ற உணவுகளில் துணை காயாகவும் சேர்த்து சமைக்கலாம்.
இன்று நாம் இட்லி தோசை சப்பாத்தி சாதம் அனைத்திலும் பயன் படுத்தும்
கத்தரிக்காய் கொத்சு செய்வதை காணலாம் :
தேவையான பொருட்கள் :
- வெங்காயம் - 2
- தக்காளி - 4
- கத்தரிக்காய் - 4
- பச்சை மிளகாய் - 2
- காய்ந்த மிளகாய் - 2
- இஞ்சி - 1 துண்டு
- பூண்டு - 6 பல்
- சாம்பார் தூள் - 1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- பெருங்காய தூள் - சிறிது
- மஞ்சள் தூள் - சிறிது
- கறிவேப்பிலை - தே அ
- உப்பு - தே அ
- எண்ணெய் - தே அ
செய்முறை :
ஒரு குக்கரில் மேற்கூறிய அனைத்தையும் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் விட்டு இறக்கி நன்கு மசித்து தாளிசம் செய்து பரிமாறவும்.
Comments
Post a Comment