சிறுநீரகத்தின பயன்களும் பாதுகாப்பும் (BENEFITS AND SAFETY OF KIDNEY)


இரத்தத்தில் உள்ள கழிவுகளையும் அதிகப்படியான நீரையும் வடிகட்டி சிறுநீராக மாற்றி வெளியேற்றுகிறது. நம் உடலில் உள்ள நீர், சோடியம், பொட்டாசியம் போன்ற அயனிகளை சமநிலை படுத்தி இரத்த அழுத்தத்தை சீராக்கும். ஹார்மோன்களை‌ உற்பத்தி செய்தல் போன்ற சிறப்பான செயல்களை செய்கிறது. எலும்பு மஜ்ஜையிலிருந்து சிவப்பணுக்களை உருவாக்கும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இரத்தத்தில் உள்ள யூரியா வை சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.

சிறுநீரகம் நெஃப்ரான்(NEPHRON) எனப்படும் சிறிய அலகுகளை பயன்படுத்தி இரத்தத்தை வடிகட்டுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளையும் அதிகப்படியான திரவங்களையும் சிறுநீராக மாற்றி வெளியேற்றுகிறது. ரெனின்( RENIN) போன்ற ஹார்மோன்கள் மூலம் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. சிறுநீரகம் சிறப்பாக செயல்பட போதுமான தண்ணீர் அருந்துவது அவசியம்.

சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள்:

  1. நாள்பட்ட சிறுநீரக தொற்று (CKD): சிறுநீரக செயல்பாடு படிப்படியாக குறையத் தொடங்கும்.
  2. சிறுநீரக செயலிழப்பு:  ஒன்று அல்லது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழக்கும் அபாயம் உள்ளது.
  3. நீரிழிவு நெப்ரோபதி: சர்க்கரை நோயால் இரத்த நாளங்கள் செயல் படாத போது ஏற்படும்.
  4. சிறுநீரக கற்கள்: சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி சிறுநீர் பாதையில் அடைப்பை ஏற்படுத்தி அதிக வலியை உண்டாக்கும்.
  5. ஆட்டோ இம்யூன் நோய்கள்: இது இரத்த நாளத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும் லூபஸ் நெஃப்ரிடிஸ் போன்ற நோய் தாக்கமாகும்.

சிறுநீரக நோய்களின் அறிகுறிகள்:

  • கணுக்கால் மற்றும் பாதங்கள் வீக்கம் .
  • சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல். 
  • சிறுநீரோடு இரத்தம் அல்லது விந்து வெளியேறுவது.
  • சிறுநீர் வெளியேறுவதில் சிரமம். 
  • இரத்தத்தில் உள்ள யூரியா அளவுக்கு அதிகமாகும் போது சிறுநீரகம் பாதிக்கப்படும்.
  • சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், மற்றும் சிறுநீரக கற்கள் போன்றவற்றாலும் சிறுநீரகம் பாதிக்கப்படும்.
  • சிறுநீரகத்தில் நோய் பாதிப்பு அதிகம் ஆகும் போது டயாலிசிஸ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சை மேற்கொள்ள படுகிறது.
  • முறையாக இரத்தத்தில் உள்ள கிரியேட்டின் அளவை சோதித்து பார்த்து அதற்கேற்றவாறு கிரியேட்டின் சமநிலை படுத்தல் வேண்டும்.

சிறுநீரகத்தை பாதுகாக்கும் முறை மற்றும் பாரம்பரிய உணவு முறைகள்: 

  1. முட்டைக்கோஸ்:‌ முட்டைக்கோஸில் ஃபோலேட், ஃபைடோகெமிக்கல் அதிகம் காணப்படுகிறது. மேலும் வைட்டமின் கே பி12, பி6, போலிக் அமிலம்,  நார்ச்சத்து போன்றவையும் அடங்கும் இவைகள் சிறுநீரகங்களுக்கு சக்தி வாய்ந்த உணவாக திகழ்கிறது.
  2. காலிஃப்ளவர் இதிலும் ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது வைட்டமின் சி யும் உள்ளது இவை நோய் எதிர்ப்புச் சக்தியைக் ஏற்படுத்தி சிறுநீரகத்தை பாதுகாக்க உதவும்.
  3. பூண்டு: இதில் சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகள் உள்ளது. இது ஒரு சிறந்த அழற்சி நீக்கி உணவாகும்.பூண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  4. வெங்காயம்: வெங்காயத்தில் குவெர்செடின் என்ற ஃப்ளேவோனாய்ட் சக்தி காணப்படுகின்றன இது ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கு பெரிதும் உதவுகிறது.
  5. பீட்ரூட்: பீட்ரூடில் வைட்டமின் கே மற்றும் பி6 உள்ள உணவாகும் .இரத்த அழுத்தத்தை சீராக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்கும் சிறுநீரகத்தை பாதுகாக்கும்.
  6. திராட்சை: வளம் நிறைந்த வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.சிறுநீரகத்தை பாதுகாக்கும் மிக சிறந்த உணவாகும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
இளநீர், தர்பூசணி வெள்ளரி, கொத்தமல்லி, ப்ருட் ஜூஸ், வாழைத்தண்டு, வெங்காயம், பூண்டு போன்றவைகளை தினமும் எடுத்து கொள்வதால் சிறுநீரகம் சிறப்பாக செயல்படும். சிறுநீரக கோளாறுகளை சரிசெய்யும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்த உணவான கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி, பீன்ஸ் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

அதுபோல நீர் சத்து நிறைந்த காய்கறிகளை அடிக்கடி உட்கொள்ளும் போது சிறுநீரகம் பாதுகாக்க உதவும். வெண்பூசணி, சுரைக்காய், கோவைக்காய், பீர்க்கங்காய், சொவ்சொவ், வாழைத்தண்டு, புடலங்காய், வெள்ளரிக்காய், நூக்கல் போன்றவை ஜூஸ்ஸாக பருகி வரலாம். இரத்தத்தில் கிரியேட்டின்  அதிகம் இருந்தால் சுரைக்காய் மிக சிறந்த உணவாகும்.

தைப்பூ என்று அழைக்கப்படும் சிறுகண்பீழை செடியை சமூகமாக( இலை வேர் தண்டு பூ) எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீர் கற்கள் வெளியேறும். அதேபோல் சிறு நெரிஞ்சில் மூலிகையும் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர சிறுநீரக கற்கள் கரைந்து விடும்.

சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றுவதில் எலுமிச்சை சாறு பருகுவது ஒரு வரப்பிரசாதம் ஆகும் ஒரு இரண்டு லிட்டர் தண்ணீரில் 1/2 எலுமிச்சை சாற்றை கலந்து தண்ணீருக்கு பதிலாக இந்த பாணத்தை குடித்து வர மிக சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

குடல் புண் மற்றும் அலர்ஜி உள்ளவர்கள் எலுமிச்சை சாறு அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

நீர்முள்ளி  கசாயம் குடித்து வரலாம்.

குறிப்பு:

நீர்காய்கறிகளை பானமாக பருகும் போது அதோடு எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாறு சேர்த்து பருகினால் மிகுந்த நன்மை பயக்கும்.

Comments