ப்ரோக்கோலியின் ஆரோக்கிய ரகசியங்கள்(BROCCOLI'S HEALTHY SECRETS IN TAMIL)


ப்ரோக்கோலி இது ஒரு ஊட்டச்சத்து மிக்க உணவாகும்.

விட்டமின் (சி,ஏ,கே) VITAMIN C A k)  மற்றும் 

கால்சியம், ஜிங்க், மெக்னீசியம் (CALCIUM, ZINC, MAGNESIUM) போன்ற தாதுக்கள் அதிக நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த ஊட்டச்சத்து உணவாகும்.


உடல் எடை குறைக்கவும், நம் குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது.

வலுவான நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது வைட்டமின் ஏஉடன் 

லுடின் மற்றும் ஜுயாக்சாந்தின் போன்றவை இருப்பதால் நம் கண்களில் ஏற்படும் மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை நோயின் தாக்கத்தைக் குறைக்க உதவும்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

பற்களை பாதுகாக்கவும் உதவுகிறது.

கர்ப்பிணி பெண்களின் கரு வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

அனைத்து வகையான புற்று நோய்.

செல்களையும் வளர விடாமல் தடுக்கும்.

அடிக்கடி சமையலில் இந்த ப்ரோக்கோலியை பயன்படுத்தி வருவதால் மேற்கூறிய உடல் சம்பந்தமான நோய்களில் இருந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்ளலாம்.

ப்ரோக்கோலியை எவ்வாறு உணவில் பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்:

  1. ப்ரோக்கோலி சாலட் 
  2. ப்ரொக்கோலி சூப்
  3. ப்ரோக்கோலி 65
  4. ப்ரோக்கோலி ‌மசாலா குருமா
  5. ப்ரோக்கோலி கிரெவி

போன்ற உணவாக சமைக்கலாம்.

ப்ரோக்கோலி ‌மசாலா குருமா செய்வது எப்படி என்பதை பார்ப்போம்:

  • தேவையான பொருட்கள்:

    1. ப்ரோக்கோலி - 1 பூ
    2. வெங்காயம் - 2
    3. தக்காளி - 2
    4. உருளை கிழங்கு - 1
    5. கேரட் - 1
    6. பீன்ஸ் - 6
    7. பச்சை மிளகாய் - 2
    8. கொத்தமல்லி தழை 
    9. புதினா தழை 
    10. முந்திரி - 10
    11. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 
    12. தனியா. தூள் - 1/2 ஸ்பூன்
    13. கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
    14. எண்ணெய் - தே‌ அ
    15. தேங்காய் - 1/2 மூடி
    16. இஞ்சி, பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
    17. சோம்பு - 1 ஸ்பூன் 

  • செய்முறை: 
    • ஒரு மிக்ஸி ஜாரில் ப.மிளகாய், கொத்தமல்லி, புதினா, சிறிது வெங்காயம், தக்காளி சிறிது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக அரைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
    • இதே போன்று மிக்ஸியில் தேங்காய்,முந்திரி, சோம்பு மூன்றையும் சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும்.
    • ஒரு குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து வதக்கவும். அதோடு வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் 
    • நன்கு வதங்கியதும் அரைத்த புதினா விழுதை சேர்த்து வதக்கவும் வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும் வதங்கியதும் அனைத்து காய்கறிகளையும் நன்கு சுத்தம் செய்து சேர்த்து வதக்கவும் வதங்கியதும் அரைத்த தேங்காய் முந்திரி விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
    • இப்பொழுது சுவையான ஆரோக்கியமான ப்ரோக்கோலி மசாலா குருமா தயார்.
    • இதை சப்பாத்தி, பூரி, சாதம், போன்ற அனைத்து உணவிற்கும் பயன்படுத்தலாம்.
  • சமைத்த ஒரு கப் ப்ரோக்கோலியில் உள்ள ஊட்டச்சத்து களின் அளவு:
    • கலோரிகள் : 55 
    • நார்ச்சத்து : 5 கிராம் 
    • புரதம் : 4 கிராம் 
    • கால்சியம் : 62 மில்லிகிராம் 
    • கொழுப்பு : <1 கிராம் 
    • கார்போஹைட்ரேட் : 11 கிராம் 
    • ஃபோலேட் : 168 எம் சி.ஜி(42% தினமும்)
    • வைட்டமின் சி: 101 மி.கி(112% தினமும்)
    • வைட்டமின் ஏ: 1210 எம்.சி.ஜி(134% தினமும். DV)
    • வைட்டமின் கே: 110எம்.சி.ஜி(92% தினமும்).

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருதயத்தை பாதுகாக்கும் பாரம்பரிய உணவுகள் (Foods That Protect The Heart in Tamil)

ஆட்டுக்கால் சூப் ரெசிபி (Mutton Soup recipe)