பாகற்காய் அழற்சி, பூஞ்சை, மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு தன்மை கொண்டது. இரைப்பையில் உள்ள பூச்சிகளை கொல்லும். பசியின்மையை போக்கி பித்தத்தை தணிக்கும். தாய்ப்பால் சுரக்கவும் உதவுகிறது. அறுசுவைகளில் இதுவும் ஒன்று. உடம்பில் உள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரலை பாதுகாக்கும். பாகற்காய் மட்டும் அல்லாமல் இதன் இலை மற்றும் விதைகள் கூட அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.
கண் சம்பந்தமான நோய்களுக்கு பாகற்காயில் உள்ள பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் உதவுகிறது. பாகற்காய் ஜுஸ் குடித்து வர செரிமான மண்டலம் சீராகி டைப் 2 இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. சிறுநீரக தொற்று ஏற்படும் போது பாகற்காய் ஜூஸ் மிக சிறந்த பாதுகாப்பு உணவாகும். பாகற்காயில் புற்றுநோய் செல்களை அழிக்கும் வல்லமை மிக்கது. இதய நோய் வராமல் பாதுகாக்கும்.
இது குறைந்த கலோரி கொண்ட ஒரு உணவாகும். இதில் வைட்டமின் பி1,பி2,பி3 மற்றும் வைட்டமின் சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ் போன்ற என்னற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. பாகற்காயை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொண்டால் போதுமான சத்துக்கள் கிடைக்கும்.
பாகற்காய் தொக்கு செய்யும் முறை:
தேவையான பொருட்கள்:
- பாகற்காய் - 250 கிராம்
- புளி - எலுமிச்சை அளவு
- வெல்லம் - சிறிதளவு
- எண்ணெய் - தே அளவு
- கடுகு
- கா. மிளகாய்
- கறிவேப்பிலை
- ரசப்பொடி - 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள்
- உப்பு - தே அளவு
செய்முறை:
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கா மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுடன் நறுக்கிய பாகற்காயுடன் உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும் வதங்கியதும் புளி கரைசல், வெல்லம், ரசப்பொடி சேர்த்து ஒரு 5 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
பாகற்காய் ஜுஸ் செய்முறை:
விதை நீக்கிய பாகற்காயை சிறிதாக நறுக்கி அதனுடன் ஒரு துண்டு இஞ்சி எலுமிச்சை சாறு (அல்லது) நெல்லிக்காய் உப்பு சேர்த்து அரைத்து வடிகட்டி குடித்து வரலாம்.
பாகற்காய் பொரியல் செய்முறை:
தேவையான பொருட்கள்
- பாகற்காய்
- சாம்பார் வெங்காயம்
- பூண்டு - 1 பல்
- தேங்காய்
- மிளகாய்த்தூள்
- மஞ்சள் தூள்
- கடுகு
- கா மிளகாய்
- கறிவேப்பிலை
- உப்பு
செய்முறை:
மிக்ஸியில் தேங்காய், சீரகம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், பூண்டு, 1 சாம்பார் வெங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் ஒன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் 1 நிமிடம் வதக்கவும் வதங்கியதும் நறுக்கிய பாகற்காயுடன் உப்பு சேர்த்து மூடி வேக விடவும். நன்கு வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து ஒரு 5 நிமிடம் மிதமான தீயில் நன்கு வதக்கி இறக்கவும்.
குறிப்பு:
- பாகற்காய் எந்த அளவுக்கு எடுக்கிறோமோ அதே அளவுக்கு சாம்பார் வெங்காயம் எடுத்து கொள்வதால் பாகற்காயின் கசப்பு தெரியாது.
- எந்த ஒரு பொரியல் செய்யும் போதும் நாம் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் போது மணமும் சுவையும் கூடுதலா இருக்கும்.
Comments
Post a Comment