ஆட்டுக்கால் சூப் ரெசிபி (Mutton Soup recipe)

இன்றைய காலகட்டத்தில் பலவகையான சூப்புகள் இருந்தாலும் சூப் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஆட்டுக்கால் சூப் தான்.

காரணம் இதில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன.




ஆட்டுக்கால் சூப்பின் நன்மைகள்:

உடலுக்கு பலத்தையும் ஆற்றலையும் தரும்

நோய் எதிர்பு சக்தி பெருகும் 

மூட்டு எலும்புகளை வலுவாக்கும்

இதில், கொலாஜன், க்ளைசமின், காண்ட்ராய்டின் சல்பேட், குளுட்டோமைன், ப்ரோலின் போன்ற எலும்புகளை வலுவாக்கும் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளது. 

இந்த ஆட்டுக்கால் சூப்பை அடிக்கடி உட்கொள்ளும் போது எலும்புகளை பாதுகாப்பதோடு வீக்கத்தை குறைக்கும் ஆஸ்டியோபோரோசிஸ்,கீழ்வாதம் போன்ற நோய்களையும் குணப்படுத்தும்.

 இதில் குளுட்டமைன் இருப்பதால் குடல் ஆரோக்கியம் குறிப்பாக செரிமான மண்டலத்தை சுத்தம் செய்யவும் குடல் அழற்சி பிரச்சினையை குறைக்கவும் உதவுகிறது.

நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் குறைந்த கலோரி ஊட்டச்சத்துகள் உள்ளதால் எடையை குறைக்கவும் செய்கிறது. 

ஆட்டுக்கால் சூப்பில் கொலாஜன் சத்து நிறைந்து காணப்படுவதால் தோல், முடி, நகங்களை பாதுகாக்கும், பல தரப்பட்ட நோய் அழற்சியை குறைக்கவும் செய்கிறது. 

ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி:

  • அளவு 2 நபர் 1/2 மணி நேரம் 

  • தேவையான பொருட்கள்:

  1. மஞ்சள் தூள் -  1/2 ஸ்பூன் 
  2. மிளகு தூள் - 1 ஸ்பூன் 
  3. சீரக‌தூள் - 1 ஸ்பூன் 
  4. சோம்பு தூள் (பெரும் சீரகம்) - 1 ஸ்பூன் 
  5. சிறிய வெங்காயம் -10
  6. தக்காளி - 1
  7. உப்பு தேவையான அளவு 
  8. இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன் 
  9. ஆட்டுக்கால் - 250 கிராம்.

  •  செய்முறை:

  • குக்கரில் நன்கு கழுவி சுத்தம் செய்த ஆட்டு எலும்புகளை சேர்க்கவும் அதோடு மஞ்சள் தூள், சீரகத்தூள், சோம்பு தூள் இடித்த வெங்காயம் நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து தாரளமாக தண்ணீர் ஊற்றி 5 விசில் விட்டு இறக்கவும் 
  • பிறகு இதோடு மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருதயத்தை பாதுகாக்கும் பாரம்பரிய உணவுகள் (Foods That Protect The Heart in Tamil)

ப்ரோக்கோலியின் ஆரோக்கிய ரகசியங்கள்(BROCCOLI'S HEALTHY SECRETS IN TAMIL)