நம் உடல் நலத்திற்கு பெரும்பங்காற்றும் ஒரு ஒப்பற்ற உறுப்பு இந்த நுரையீரல்.
நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு சேர்க்க வல்லது.
பல நோய் தொற்றுகளால் நுரையீரல் பலவீனம் அடைகிறது.
நுரையீரலை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
நுரையீரலை நோய் தொற்றின் அறிகுறி:
- மூச்சு திணறல்
- ஆஸ்துமா (மூச்சு இளைப்பு)
- தொடர் இருமல்
- நுரையீரல் புற்றுநோய்
- நுரையீரல் அடைப்பு(COPD)
- நுரையீரல் அழற்சி(நிமோனியா)
- சளி பிடிப்பது
புகைபிடிபதால் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இது போன்ற நோய்களில் இருந்து நுரையீரலை நாம் பேணிக்காக்க வேண்டும்.
நுரையீரலை பாதுகாப்பது எப்படி:
- சமச்சீரான உணவு பழக்கம் மூலம் நுரையீரலை பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியும் மேலும் பழங்கள், மற்றும் காய்கறிகள், தானியங்கள், புரதங்களை எடுத்து கொள்ளவது மூலம் நுரையீரலை பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியும்.
- ஒமேகா 3 நிறைந்த உணவுகள் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சால்மன், மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு நிறைந்து காணப்படுகின்றன மேலும் ஆளிவிதை, சியாவிதை, கடல்பாசி, கீரை வகைகள், மற்றும் வால்நட்ஸ், சோயாபீன்ஸ் போன்றவற்றிலும் ஒமேகா 3 சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
நுரையீரலை பாதுகாக்கும் (LUNGS DETOX)சில வீட்டு குறிப்புகள்:
- மஞ்சளில் உள்ள குர்குமின்கள் ஆண்டி ஆக்ஸிடன்டாக செயல்பட்டு நுரையீரலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க உதவுகிறது.
- அனைத்து விதமான வாழைப்பழங்களும் விட்டமின் சி மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவுகள் ஆகும். பொட்டாசியம் நுரையீரல் சீராக செயல்பட வைக்கிறது.
- இஞ்சி, கடுக்காய், கரிசலாங்கண்ணி இம்மூன்றும் நுரையீரலை சுத்தம் செய்ய உதவும்.
- ஒரு டம்ளர் தண்ணீரில் மஞ்சள் தூள் இஞ்சி இலவங்கபட்டை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அதோடு இனிப்புக்காக பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவர சுவாசப் பாதை நச்சுக்களை நீக்கி விடலாம்.
- அதிமதுரம் நுரையீரலை பாதுகாக்கும் மிக சிறந்த மருந்து.
- மூக்கடைப்பு நீங்க ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஓமத்தை சேர்த்து ஆவி பிடித்து வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும், அலர்ஜி மற்றும் சளியில் இருந்து நிவாரணம் கிடைக்கும், சுவாச பாதையை திறக்கும்.
- ஒரு டம்ளர் தண்ணீரில் வெற்றிலையை கொதிக்க வைத்து குடிப்பதால் மார்பு சளி குறையும் அதேபோல் ஒரு டம்ளர் தண்ணீரில் பூண்டு, அன்னாசி, இஞ்சி, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து குடிக்கலாம்.
- ஒரு கின்னத்தில் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனுடன் துருவிய இஞ்சி எலுமிச்சை சாறு, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சு சளி நீங்கும். இருமலை கட்டுப்படுத்தும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதோடு நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு,லவங்கப்பட்டை, நறுக்கிய எலுமிச்சை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் மற்றும் நுரையீரல் அழற்சி சரியாகும். மேலும் நுரையீரலில் தேங்கியுள்ள சளி மற்றும் சைனஸ் ஆஸ்த்துமா ஜலதோசம் ஆகியவற்றை சரிசெய்யும்.
- கடுக்காய் மற்றும் கிராம்பு நுரையீரல் பிரச்சினையை சரிசெய்யும்.
- அலர்ஜியினால் ஏற்படும் தும்மல் அல்லது அடுக்கு தும்மல் ஏற்படும் போது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் கிராம்பை ஒன்றிரண்டாக இடித்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் அடுக்கு தும்மல் சரியாகும்.
- கருப்பு உலர்ந்த திராட்சையை இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் 20 திராட்சையை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் திராட்சையை சாப்பிட்டு தண்ணீரை குடித்தால் சளி இருமல் குணமாகும்.
- மேற்கூறிய அனைத்தையும் முயற்சி செய்து நுரையீரலை பாதுகாப்பாக வைத்து கொள்ளவும்.
- மஞ்சளோடு பால் பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவர சுவாசப் பாதையில் உள்ள நச்சுக்களை நீக்கலாம்.
- இஞ்சி எலுமிச்சை ஜூஸ், ஆப்பிள் மற்றும் பீட்ரூட் ஜுஸ் பருகலாம்.
தீராத நெஞ்சு சளி மற்றும் வறட்டு இருமல் சரியாக:
- 15 கிராம்பு 10 மிளகு(pepper) இரண்டையும் லேட் சாக வறுத்து ஒன்றிரண்டாக இடித்து அதனுடன் சிட்டிகை உப்பும் மஞ்சள் தூள் தேன் கலந்து இரவில் தூங்கும் முன் ஒரு ஸ்பூன் மென்று தின்றால் எப்பேர்ப்பட்ட சளியும் வறட்டு இருமலும் குணமாகும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதோடு 4 கிராம்பு, ஓமம் 1 ஸ்பூன் ஒரு துண்டு இஞ்சி இடித்தது ஏலக்காய் மிளகு சீரகம் மூன்றையும் ஒன்றிரண்டாக இடித்து சேர்த்து ஒரு துண்டு கற்பூரவள்ளி இலை அல்லது துளசி அல்லது புதினா அல்லது வெற்றிலை ஏதாவது ஒரு இலையை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அதோடு தேன் கலந்து பருகலாம்.
- மற்றுமொரு சிறந்த உணவாக எந்த வகையான சளியாக இருந்தாலும் மூக்கு ஒழுகல் மற்றும் நெஞ்சு சளி(COLD & COUGH) எதுவாக இருந்தாலும் நண்டு சூப் எடுத்து கொள்ளலாம். இது ஒரு சிறந்த அருமருந்தாகும்.
- கொய்யாப்பழத்தடன் மிளகு சேர்த்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.
- தீராத இருமலுக்கு பைன்னாப்பிள்(PINEAPPLE)ஒரு சிறந்த அருமருந்தாகும்.
Comments
Post a Comment