கல்லீரல் ஆரோக்கியமும் பராமரிப்பும் (Liver Health And Care)




நம் உடலில் எப்படி பஞ்ச இந்திரியங்கள் (மெய்(சருமம்), வாய்(நாக்கு),கண், மூக்கு ,செவி) முக்கியமோ, அதேபோல் நம் உள் உறுப்புகளில்  இராஜ உறுப்புகள்(இருதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம்) ஒவ்வொன்றும் அளப்பரிய செயலைச் செய்து முழு உடலையும் பாதுகாக்கிறது.

இந்த ஐந்து இராஜ உறுப்புகளில் தலைமை பீடமானது கல்லீரலுக்கு தான். கல்லீரல் தான் மற்ற உறுப்புகளையும் சீராக வைக்க உதவுகிறது.

வாய் வழியாக நாம் எடுத்துக்கொள்ளும் உணவு, காற்று, தண்ணீர், நோய்க்கான மருந்துகள் இவைகளில் உள்ள நச்சுக்களை நீக்கி முழு உடலையும் பாதுகாக்கிறது.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் இன்சுலினை சுரக்க வைப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. அடி பட்ட காயங்களில் ஏற்படும் உதிரப்போக்கினால் உண்டாகும் இரத்தத்தை உறைய வைக்கும்.

நம்  உணவின் மூலம் எடுத்து கொள்ளும் ஊட்டச்சத்துக்களை சேமித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது பிற உறுப்புகளுக்கும் வழங்கும். செரிமானத்திற்கு தேவையான பித்தநீரை உற்பத்தி செய்யும். இப்படி அபரிதமான செயலைச் செய்து வரும் கல்லீரலில் நம்முடைய தவறான உணவு முறையாலும், மது அருந்துவதாலும் கல்லீரலில் பழுது ஏற்படுகிறது.

ஒரு அற்புதமான நிகழ்வு என்னவென்றால் நம் கல்லீரல் வளரும் தன்மை கொண்டது. இப்படி பட்ட மேன்மை நிறைந்த ஒரு உறுப்பை நாம் பேணிக்காக்க முழு முயற்சி செய்து பாதுகாக்க வேண்டும். மற்ற உறுப்புகளில் ஏற்படும் நோய் பாதிப்பு அவ்வப்போது நமக்கு அறிகுறிகளை காட்டிவிடும். ஆனால் கல்லீரல் நோய் பாதிப்பு கடைசி நேரத்தில் தான் தெரிய வரும். நாம் நம் கல்லீரலை பாதுகாக்கும் பாரம்பரிய வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

கல்லீரல் தன்னைத்தானே சுத்திகரிப்பு செய்து கொள்ளும் சிறப்பு மிக்கது சுய மருத்துவர் என்றே அழைக்கலாம். நம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் தன்னை தானே சுத்தம் செய்து கொள்ளும் வகையில் தான் படைக்கபட்டுள்ளது. மற்ற உறுப்புகளை சுத்தம் செய்யவும் கல்லீரல் தான் உதவுகிறது.

நாம் உறங்கும் போது இரவு நேரத்தில் தான் கல்லீரல் தன்னை சுத்தம் செய்து கொள்ளும். அதற்கு நம்முடைய பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும் பங்களிப்பு என்றால் மிக எளிதான ஒன்று தான் முடிந்தவரை இரவு உணவை சூரிய அஸ்தமனம் ஆன பிறகு உண்ணாமல் இருப்பது மிக மிக சிறந்த வழி. இல்லை என்றால் இரவு 7 மணிக்குள் சாப்பிட்டு முடித்து விடுங்கள். இது ஒன்றை தவறாமல் தினமும் நடைமுறை படுத்தி வந்தால் நல்ல திடகாத்திரமான நோய்யற்ற வாழ்வை வாழலாம்.

கல்லீரல் நோயின் அறிகுறிகள்:

  1. மஞ்சள் காமாலை 
  2. வயிற்றுவலி மற்றும் வயிறு வீக்கம் 
  3. தோல் நமைச்சல் 
  4. கால்களில் வீக்கம் 
  5. சிறுநீர் நிறத்தில் காணப்படும் மாற்றம் 
  6. இரத்தம் கலந்து மலம் வெளியேறும் 
  7. குமட்டல் மற்றும் வாந்தி 
  8. சோர்வு மற்றும் பசியின்மை.
  9. கல்லீரலில் கொழுப்பு (FATTY LIVER)

இதுமட்டுமின்றி  மருந்துகளின் பக்க விளைவுகளலாலும் பாதிப்பு ஏற்படுகிறது. 

கல்லீரலை வலுப்படுத்தும் உணவுகள்:


  1. காய்கறிகள்: ப்ரோகோலி, காலிபிளவர்
  2. சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை
  3. கீரை வகைகள்
  4. கொட்டைகள்(NUTS): பாதாம்,பிஸ்தா,முந்திரி,வால் நட்ஸ்
  5. ஒமேகா 3 நிறைந்த உணவுகள்: ஆளிவிதை(Flaxseeds), சியாவிதை(Chiaseeds), அக்ரூட்(Wallnuts), சோயாபீன்ஸ்(Soybeans), 
  6. மீன் உணவுகள்: கிழக்கான்(Salman), மத்தி(Mackerel).

கல்லீரலை சுத்தம் செய்யும் எளிதான பானங்களை பார்ப்போம்:

  1. ஒரு கப் தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அதோடு தேவையான அளவு இந்துப்பு சேர்த்து பருகவும்.
  2. முதல்நாள் இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சோம்பு(பெருஞ்சீரகம்) போட்டு மூடி வைத்து விடவும். மறுநாள் காலை அதை வடிகட்டி குடித்து வரலாம்.
  3. தண்ணீரில் புதினா மற்றும் கொத்தமல்லி தழை 2 பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அதோடு மஞ்சள் தே அளவு இந்துப்பு சேர்த்து பருகவும்.
  4. அஸ்ட்ட சூரணம் தயார் செய்து வைத்து கொண்டு தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்லது.

    அஸ்ட்ட சூரணம் செய்முறை:

    சீரகம், சோம்பு, ஓமம், மிளகு, பெருங்காயம், திப்பிலி, சுக்கு இந்துப்பு மேற்கூறிய அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்து அதனுடன் தே.அளவு இந்துப்பு சேர்த்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பொடியை கலந்து பருகி வரலாம்.
  5. ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது இஞ்சி, பூண்டு, பட்டை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அதோடு மஞ்சள் தூள் எலுமிச்சை சாறு தேன் கலந்து பருகி வரலாம்.
  6. ஒரு மிக்ஸியில் 2 நெல்லிக்காய் கொட்டை நீக்கி நறுக்கி அதனுடன் சோற்றுக் கற்றாழை ஜெல் சிறிது கொத்தமல்லி தழை தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி மஞ்சள் தூள் இந்துப்பு சேர்த்து வாரம் ஒரு முறை வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.

மேற்கூறிய பானத்தில் ஏதாவது ஒன்றை அல்லது ஒவ்வோன்றயும் ஒரு முறை மாற்றி மாற்றி தயார் செய்து தவறாமல் தினமும் பருகி வந்தால் கல்லீரலை பாதுகாக்கலாம்.

Comments