சுரைக்காயின் மருத்துவ குணங்கள் (bottle gourd's benefits for health)


சுரைக்காய் நீர் காய்கறிகளில் முக்கியமான ஒன்றாகும். அதிக நீர் சத்து நிறைந்த ஊட்டச்சத்து உணவு. சுரைக்காயில் நீர் சத்தானது 96% நிறைந்து காணப்படுகின்றன. இது நம் உடலுக்கு தேவையான நீர் சத்தை சீராக்கி புத்துணர்ச்சியோடு வைக்க உதவுகிறது. உடல் எடை கட்டுப்பாடு செரிமான மேம்பாடு, இதய ஆரோக்கியம் மற்றும் எலும்புகளை வலுவாக்குவது போன்ற ஆரோக்கிய நன்மைகள் கொண்டது. வைட்டமின், பொட்டாசியம், கால்சியம்,  மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்தது. உடலை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியோடும் வைக்கிறது.

சுராய்க்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தையம் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தையும் கால்சியம் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் எலும்புகளையும் வலுவாக்குகிறது. மேலும் வைட்டமின் சி, பி3, பி5, பி6 மற்றும் இரும்பு சத்து, துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. குடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். மலச்சிக்கல் நீங்கும். இதை மாமருந்து என்று கூட கூறலாம்.

இரத்தில் கிரியேட்டின் அளவு அதிகமாக இருந்தால் டயாலிசிஸ் மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுவதை தவிர்க்க சுரைக்காய் ஒரு ஒப்பற்ற உணவு ஆகும். இதை வரும் முன் காப்போம் என்ற விதத்தில் நோய் தொற்றுமுன்னே உணவாக சுரைக்காயை எடுத்து கொள்வதால் சிறுநீரகம் சிறப்பாக இருக்கும்.

இவ்வளவு ஆரோக்கியமான சுரைக்காயை அன்றாடம் நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் நோயற்ற வாழ்வு வாழலாம். குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சுரைக்காயை தவிர்த்து விடுவது நல்லது. சுரைக்காயை கூட்டு பொரியல், துவையல், இனிப்பு, மற்றும் ஜூஸாகவும் சாப்பிட்டலாம்

சுரைக்காய் கூட்டு செய்வது எப்படி:

தேவையான பொருட்கள்:

  • சுரைக்காய் சிறியது 
  • துவரம் பருப்பு 1 கை பிடி
  • சிறு பருப்பு.  4 ஸ்பூன் 
  • கடலைப்பருப்பு 2 ஸ்பூன் 
  • வெங்காயம் 1 பெரியது 
  • தக்காளி 1 பெரியது 
  • பூண்டு. 6 பல் 
  • மஞ்சள் தூள் 
  • தேங்காய் 
  • கா மிளகாய் 2 
  • பச்சை மிளகாய் 2 
  • உப்பு - தேவாயான அளவு

ஒரு குக்கரில் மேற்கூறிய அனைத்தையும் (தேங்காய் தவிர்த்து) சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி 4 விசில் விட்டு இறக்கி தேங்காய் உடன் சிறிது சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கலந்து தாலிதம் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். குழம்பிற்கு பதிலாகவும் இதை பயன்படுத்தலாம். அல்லது கூட்டாகவும் பயன்படுத்தலாம். கூட்டாக பயன்படுத்தும் போது கெட்டியாக சமைத்துக்கொள்ளவும்.

சுரைக்காய் ஜூல்ஸ் செய்வது எப்படி:

இரண்டு வகையான ஜூஸை தயார் செய்யலாம்.
ஒன்று இனிப்பு மற்றோன்று உப்பு சேர்த்து தயார் செய்யலாம்.

  1. சுரைக்காய் ஜூஸ்: (இனிப்பு)
    • தேவையான சுரைக்காயை சுத்தம் செய்து நறுக்கிய சுரைக்காய் ஒரு நெல்லிக்காய் கொட்டை நீக்கியது . ஒரு துண்டு இஞ்சி, புதினா இலை சிறிது சேர்த்து அரைத்து வடிகட்டி அதோடு தேவையான அளவு இனிப்பு கலந்து பருகலாம்.   
  2. சுரைக்காய் ஜூஸ்: (உப்பு)
    • தேவையான சுரைக்காய், நெல்லிக்காய், கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலை, புதினா அனைத்தையும் சேர்த்து அரைத்து வடிகட்டி அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து மோருடன் பருகலாம்.

சுரைக்காய் சூப் தயார் செய்வது எப்படி: 

சுரைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் வெங்காயம், தக்காளி,இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வேகவிடவும். பின்னர் ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து அதனுடன் சீரகத்தூள், சோம்பு தூள், மிளகுத்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு: 

சில சுரைக்காய் கசப்பாக இருக்கும் சைட்குபிடசின்(cucurbitacin) என்ற நச்சு பொருளால் ஏற்படும். இது போன்ற கசப்பான சுரைக்காயை உட்கொள்ளும் போது வயிற்றுப்போக்கு வாந்தி வயிற்றுவலி போன்ற அசொவரியங்கள் ஏற்படும் ஆகவே கசப்பான சுரைக்காயை தவிர்த்து விடுவது நல்லது.

Comments