பாரம்பரிய எலும்பு-குழம்பு, வெஜ்-குழம்பு செய்முறை மற்றும் நன்மைகள் (BONE AND VEG BROTH IN TAMIL)

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகபடுத்த நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் தினமும் ஒரு சூப்பை உணவாக உட்கொள்ளும் போது எலும்புகளை அது வலுவாக்கும். பலவகையான சூப்புகள் உள்ளது. 



சைவ உணவு முறையில் காய்கறிகளை கொண்டு சூப் தயார் செய்யலாம். ஒவ்வொரு காய்கறிகளிலும் தனி தனி சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் அனைத்து காய்கறிகளை கொண்டு சூப் தயார் செய்யலாம். 

தனி தனி காய்கறிகளை கொண்டும் சூப் தயார் செய்யலாம் அல்லது கலவையாக 2,3 காய்கறிகளை சேர்த்தும் செய்யலாம்.

அசைவ சூப்புகளை பொறுத்தவரை ஆட்டு எலும்பு மற்றும் கோழி கறி மற்றும் கோழி காலிலும் சூப் தயார் செய்யலாம்.

காய்கறி குழம்பு (VEG-BROTH) மற்றும் எலும்பு குழம்பு (BONE- BROTH) போன்று தயார் செய்து பருகலாம்.

வெஜ் ப்ராத் செய்வது எப்படி?

  • தேவையான பொருட்கள்:

    1. ‌கேரட் - 1
    2. பீன்ஸ் - 5 or 6
    3. ப்ரோக்கோலி - 100 g
    4. வெங்காயம் - 1
    5. பூண்டு - 10-15 பல் 
    6. செலரி (சீமை கொத்தமல்லி) - 1 கைபிடி
    7. உப்பு தேவையான அளவு

  •  செய்முறை :
    • ஒரு பாத்திரத்தில் அனைத்தும் சேர்த்து ஒரு 1 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 45 நிமிடங்கள் கொதிக்க வைத்து உப்பு சேர்த்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
    • மிதமான சூட்டில் பருகலாம். 
    • வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது. 
    • குழந்தைகள் இதை பருக தவறும் பட்சத்தில் இதை சப்பாத்தி மாவுடன் கலந்து பிசைந்து கொடுக்கலாம். 

எலும்பு ப்ராத் (BONE BROTH) செய்வது எப்படி:

ஆட்டு காலிலும் மற்றும் கோழி காலிலும் தயார் செய்யலாம்.

செய்முறை இரண்டுக்கும் ஒன்று தான்.

ஆட்டு காலில் செய்யும் போது அதோடு 4-5 கோழி காலையும் சேர்த்து கொள்வது நல்லது. 

கோழி காலில் அதிகப்படியான கோல்ஜன் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.இது மிக அவசியமான ஒன்றாகும்.

  • தேவையான பொருட்கள்:

    1.  ஆட்டுக்கால் 500 கிராம் அல்லது கோழி கால் 500 கிராம்
    2. சின்ன வெங்காயம் - 20
    3. கேரட் - 1
    4. கொத்தமல்லி
    5. புதினா
    6. மஞ்சள் தூள்
    7. சீரகம்
    8. பெருஞ்சீரகம் (சோம்பு)
    9. செலரி (சீமை கொத்தமல்லி)
    10. உப்பு தேவையான அளவு
    11. மிளகு தூள் 

  •  செய்முறை 

    1. ஒரு பாத்திரத்தில் மேற்கூறிய அனைத்தையும் சேர்த்து அதனுடன் 
    2. தாரளமாக தண்ணீர் சேர்த்து ( தேவைக்கு ஏற்ப)
    3. மிக‌‌ குறைந்த தீயில்(complete low flame) ஒரு 3 மணி நேரம் கொதிக்க வைத்து வடிகட்டி பருகலாம்.
    4. அதிக சத்துக்கள் நிறைந்த இந்த எலும்பு குழம்பை தினமும் பருகி வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்,தோல் பளபளப்பாகும், எலும்பு வலுப்பெறும்.

குறிப்பு:

  • இந்த எலும்பு ப்ராத்தை(bone broth) சில நபர்கள் 
  • கொஞ்சம் அதிகமாக தயார் செய்து வைத்து கொண்டு ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது எடுத்து சூடாக்கி பயன் படுத்தி வருகிறார்கள்.
  •  அவ்வாறு செய்வது உடல் நலத்திற்கு நல்லது அல்ல என‌
  • பல மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆகவே ஃப்ரெஷ்ஷாக தயார் செய்து பருகுவது நல்லது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருதயத்தை பாதுகாக்கும் பாரம்பரிய உணவுகள் (Foods That Protect The Heart in Tamil)

ப்ரோக்கோலியின் ஆரோக்கிய ரகசியங்கள்(BROCCOLI'S HEALTHY SECRETS IN TAMIL)

ஆட்டுக்கால் சூப் ரெசிபி (Mutton Soup recipe)