இருதயத்தை பாதுகாக்கும் பாரம்பரிய உணவுகள் (Foods That Protect The Heart in Tamil)





நமது உடலின் மிக முக்கிய உருப்பான இருதயத்திற்கு நவீன மருத்துவம் பல்வேறு சிகிச்சைகள் வழங்கினாலும், இயற்கை நமக்கு பலகாலமாக இருதயத்தை பாதுகாக்க பாரம்பரிய உணவு முறைகளை வழங்கி உள்ளது இரத்த அழுத்தத்தை குறைப்பதாலும் மற்றும் கொழுப்பை குறைப்பததன் மூலமும் இருதய துடிப்பை சீராக வைக்க உதவுகிறது இருதயத்தை பாதுகாக்கும் பாரம்பரிய உணவு மற்றும் தயாரிக்கும் வழிகளை காணலாம்

1. பூண்டு (Garlic)

  • நன்மை: இரத்த அழுத்தத்தை குறைக்கும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
  • பாலுடன் பூண்டு (Garlic with Milk)
தேவையான பொருட்கள்:  
  1. பால் – 1 கப்
  2. பூண்டு – 5–6 பல் (நறுக்கியது)
  3.  பனங்கற்கண்டு 1 ஸ்பூன் 
  4. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் 

தயாரிப்பு முறை :
  1. பாலுடன் நறுக்கிய பூண்டு மற்றும் மஞ்சள் சேர்த்து 5–7 நிமிடம் மெதுவாக கொதிக்க விடவும்.
  2. பனங்கற்கண்டு சேர்த்து இளம் சூட்டில் குடிக்கலாம்.
நன்மைகள்:
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
  • இதய ஆரோக்கியம் மற்றும் இரத்த அழுத்த கட்டுப்பாடு

2. மஞ்சள் (Turmeric)

  • நன்மை: மஞ்சளில் உள்ள குர்க்குமின் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்தது, இதயத்தை பாதுகாக்கும்.
  • பயன்பாடு:
    • மஞ்சள் பால் (turmeric milk) தயாரிக்கும் முறை.
    • தேவையான பொருட்கள்:
      • பால் – 1 கப்
      • மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
      • மிளகு தூள் – 1 சிட்டிகை
      • சுக்கு – ½ டீஸ்பூன் 
      • தேன் அல்லது கருப்பட்டி அல்லது பணங்கற்கண்டு – 1 டீஸ்பூன்
    • தயாரிக்கும் முறை:
      1. ஒரு சிறிய பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடாக்கவும்.
      2. அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், சுக்கு சேர்க்கவும்.
      3. பால் கொதிக்கும் வரை நன்கு கிளறி விடவும்.
      4. அடுப்பில் இருந்து இறக்கி,  தேன் அல்லது கருப்பட்டி அல்லது பணங்கற்கண்டு சேர்த்து பருகவும்.
      5. இளம் சூடாக இருக்கும் போது குடிக்கலாம்.
  • பயன்கள் 🌿:
    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
    • சளி, இருமல், நுரைஈரல் பிரச்சனைகளை தடுக்கும்.
    • உடல் வலி, மூட்டு வலியை குறைக்க உதவும்.
    • நல்ல நிம்மதியான உறக்கத்தைக் கொடுக்கும்.
  • குழந்தைகளுக்கு:
    • மிளகின் அளவை சற்று குறைத்து, பணங்கற்கண்டு பையன்படுதுவது சிறந்தது.
  • அனைத்து சமையல் பொருட்களிலும் சிறிது மஞ்சள் சேர்த்து சமைக்கலாம்.

3. கீரை வகைகள் (Leafy Greens)

  • சந்தையில் பலவகையான கீரைகள் நமக்கு கிடைக்க பெறுகிறது. ஒவ்வொறு நாளும் ஒருகீரை வீதம் அன்றாடாம் உணவில் பயன்படுதலாம். 
  • நன்மை: கீரைகளில் வைட்டமின் எ, சி, கே,(A,C,K) தாதுக்கள் (இரும்பு மற்றும் கால்சியம்) மற்றும் அதிக நார்ச்சத்தை கொண்டுள்ளது. இந்த நார்ச்சத்துகள் மலச்சிக்கலை போக்குகிறது. 
  • தேவையான பொருட்கள்:
    1. ஏதாவது ஒரு கீரையை எடுத்துக்கொள்ளவும் .
    2. துவரம் பருப்பு - 2 கைபிடி 
    3. வெங்காயம் - 1 
    4. தக்காளி - 1  
    5. பச்சை மிளகாய் - 2
    6. எண்ணெய் – 1 ஸ்பூன் 
    7. கடுகு – ½ ஸ்பூன் 
    8. பூண்டு – 1 பல் 
    9. உப்பு,  தேவையான அளவு 
    10. சீரகம் - ½ ஸ்பூன்  
    11. காய்ந்த மிளகாய் - 2  
    12. கருவேப்பிலை  
    13. மஞ்சள் தூள்   
  • செய்முறை:  
    • கீரைகளை நன்கு கழுவி, சுத்தம் செய்து அதனுடன் பருப்பு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள், உப்பு , சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிட்டு இறக்கவும். சிறிது ஆறியவுடன் ஒரு மத்தால் கடைந்து கொள்ளவும். 
    • ஒரு சட்டியில் சிறிது என்னை விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கருவேபில்லை போட்டு தாலிசம் செய்து பரிமாறவும்.

4. பருப்பு வகைகள் (Legumes)

  • நன்மை: பருப்பு வகைகளில் புரதம், நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், போன்ற, தாதுக்கள், நிரைந்துள்ளன. இது இதய ஆரோக்கியத்தை மேம்பாடுதுகிறது, இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.  
  • பருப்பு குழம்பு செய்முறை:
  • தேவையான பொருட்கள்:
    • துவரம் பருப்பு 1கப், சிறு பருப்பு – 1/4 கப்
    • பூண்டு – 2 பல்
    • மஞ்சள் தூள் 
    • பெருங்காயம் சிறிதளவு 
    • எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய் 2, உப்பு
  • தயாரிப்பு முறை:
    1. பருப்புகளை நன்கு கழுவி 20–30 நிமிடம் ஊறவைக்கவும்.
    2. ஒரு குக்கரில் பருப்பு, பூண்டு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து 2–3 விசில்கள் வேகவைத்து  எடுத்துக் கொள்ளவும்.
    3. வேகவைத்த பருப்பை ஒரு மத்தால் நன்கு கடைந்து கொள்ளவும்.
    4. சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை  சேர்த்து தாளித்து பருப்புடன் சேர்த்து பரிமாறவும்.
  • நன்மைகள்:
    • புரதச் சத்து அதிகம்
    • இரத்த சக்கரை கட்டுப்பாடு
    • இதய ஆரோக்கியம்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ப்ரோக்கோலியின் ஆரோக்கிய ரகசியங்கள்(BROCCOLI'S HEALTHY SECRETS IN TAMIL)

ஆட்டுக்கால் சூப் ரெசிபி (Mutton Soup recipe)