மண்ணீரலின் பயன்கள் (BENEFITS OF SPLEEN)


இது இரத்தத்தை வடிகட்டி பழைய சேதமடைந்த அணுக்களை அகற்றி புதிய இரத்த அணுக்களை உருவாக்குகின்றன.கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் வெள்ளை அணுக்களை உருவாக்கி இரத்த அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்கிறது.

நோய் எதிர்ப்பு‌ மண்டலத்துடன் நெருக்கமாக செயல்படும் முக்கிய உறுப்பு மண்ணீரல். இரத்தத்தில் ஒரு பகுதியை சேமித்து வைத்துக் கொண்டு கடுமையான இரத்தப்போக்கு ஏற்படும் போது இரத்தத்தை வெளியிடும்.

மண்ணீரல் நோய் தொற்றின் அறிகுறிகள்:

  • வயிற்றின் இடது மேல் பகுதியில் அதிக வலி ஏற்படும். இந்த வலி தோள்பட்டை வரை பரவ கூடும். 
  • காய்ச்சல் மற்றும் வாந்தி சோர்வு ஏற்படும்.
  • மண்ணீரல் பெரிதாவதால் வயிறு வீங்கியது போன்று தோன்றும்.
  • மண்ணீரல் பாதிக்கப்படும் போது அடிக்கடி நோய் தோற்று ஏற்படும்.
  • கடுமையான வலி காய்ச்சல் வயிறு வீக்கம் மற்றும் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டால் மண்ணீரலில் நோய் தாக்கம் அதிகமாக உள்ளது என்பதை கவனத்தில் கொண்டு உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

மண்ணீரலை பாதுகாக்கும் உணவுகள்:

  • வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, மற்றும் சிட்ரஸ் பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • தயிர், கேஃபிர், போன்ற புரோபயாட்டிக்ஸ் உணவுகள் குடல் நுன்னுயிர்களை உருவாக்கி மண்ணீரலை பாதுகாக்கும்.
  • கீரை வகைகள் மற்றும் பழங்கள் மண்ணீரலை பாதுகாக்கும்.

மன அழுத்தம் செரிமானத்தை பாதிக்கும். செரிமானம் பாதிக்கும் போது மண்ணீரலும் பாதிக்கும். போதுமான தூக்கம் மற்றும் தண்ணீர் குடிப்பது நல்லது. அதிக கொழுப்பு, சர்க்கரை, மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவுகள்  மண்ணீரலை‌ பாதுகாக்க உதவும் என்றாலும் மண்ணீரல் நோய் பாதிப்பு அதீதமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

நோய்களில் இருந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்ள உணவுகள் இன்றியமையாத ஒன்றாகும். இருப்பினும் உணவு மூலம் பாதுகாப்பு மேற்கொள்ளவது வரும் முன் காப்போம் என்பதாகும்.

நோய் வரும் முன் காக்க உணவுகள் உதவும் நோய் வந்து விட்டால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை மேற்கொள்வதே சிறப்பு. உரிய மருத்துவம்  மேற்கொண்டு நோய்களில் இருந்து விடுபட்ட பிறகு தொடர்ந்து சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டு மறுபடியும் நோய் தொற்று ஏற்படாத வாறு பார்த்து கொள்ள வேண்டும்.

பச்சை காய்கறிகள், பூண்டு, சர்க்கரைவள்ளிகிழங்கு, இஞ்சி, கேரட், மஞ்சள், ஆப்பிள், பீட்ரூட், முள்ளங்கி, எலுமிச்சை, கீரை, அவகோடா, பூசணிவிதைகள்,  அதிமதுரம், பார்லி, முழ தானியங்கள் மண்ணீரலை பாதுகாக்கும் உணவுகள்.

Comments