பீர்க்கங்காய் பயன்கள் (BENEFITS OF RIDGE GOURD)

நீர் காய்கறிகளில் இதுவும் ஒன்று கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, தயாமின், புரதச்சத்து போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். அதுமட்டுமின்றி ரிபோஃப்ளோவின், மெக்னீசியம், ஜிங்க், செலினியம், காப்பர் போன்ற மினரல்கள் மிகுந்து காணப்படுகின்றன. இத்தகைய சத்துக்கள் நிறைந்த உணவை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் நீர் சத்துக்கள் அதிகம் காணப்படுவதால் உடம்பை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. உடல் சூட்டை தணிக்கும்.

எலக்ட்ரோலைட்டுகளை தக்க வைக்கவும் அசிடிட்டியை சமப்படுத்தவும் உதவுகிறது. பொதுவாக நீர் சத்து நிறைந்த உணவுகள் உடல் எடை குறைக்க‌ பெரிதும் துணை புரிகிறது. இதன் காய்கள் எப்படி நமக்கு ஊட்டச்சத்து மிக்க உணவாக திகழ்கிறதோ அதேபோல் இதன் இலைகள் கூட சிறந்த பயன் தரும். உடம்பில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டால் அந்த வீக்கத்தை குறைக்கு‌ இதன் இலைகள் பயன் படுகிறது. இதன் இலைகளை அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் தடவி வர வீக்கம் படி படியாக குறையும். 

இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும். சரும சேனல்களின் இரத்த ஓட்டத்தை சீராக்கும். பீர்க்கங்காயில் வைட்டமின் சி மற்றும் ஏ ஆண்டி ஆக்ஸிடன்டுகள் மிகுந்து காணப்படுகிறது. இது நம் உடலில் ஃப்ரிரேடிக்கல்களை நீக்கி ஆக்ஸிடேட்டில் அழுத்தத்தை போக்கி சரும திசுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முகப்பரு, கரும்புள்ளிகளை நீக்கி மிருதுவான சருமத்தை தருகிறது.

இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வையை அதிகரிக்க செய்து
பார்வை திறனை மேம்படுத்தும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க பீர்க்கங்காயில் உள்ள ஹைப்போகிளைசமின் உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாகும். பித்தப்பை மற்றும் கல்லீரலை பாதுகாக்கும். கல்லீரலில் சூரக்கும் பித்தம் மற்றும் கொழுப்பை உடைக்கிறது. கல்லீரலில் மஞ்சள் காமாலை போன்ற தொற்று ஏற்படாத வகையில் பாதுகாக்கும். 

நம் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவே காரணமாக உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகபடுத்த பீர்க்கங்காய் மிக சிறந்த உணவாகும். ஆகவே நாம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்றாடம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் இந்த பீர்க்கங்காயை. பீர்க்கங்காயை கூட்டு, கடையல், ஜூஸ், பொரியல், பீர்க்கங்காய் தொவையல் போன்றவைகளாக‌ செய்து சாப்பிடலாம்.
ஏதாவது ஒரு வகையில் பீர்க்கங்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது.

பீர்க்கங்காய் கடையல் செய்முறை:

இது இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் அனைத்திலும் பயன் படுத்தலாம்.
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம், சோம்பு சேர்த்த வதங்கியதும் பூண்டு, தக்காளி மற்றும் பீர்க்கங்காய் சேர்த்து நன்றாக வேகவைத்து இறக்கி ஒரு மத்தால் நன்கு கடைந்தால் சுவையான பீர்க்கங்காய் கடையல் ரெடி.

Comments